சேலம் சின்னத்திருப்பதியில் அமைந்துள்ள
நம்பிக்கை முதியோர் இல்லத்தில் 2024 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக 31/12/23 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், அரிசி பைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் திருமதி செ.உமாராணி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு சரவணகுமரன்,
மாற்றுத் திறனாளி நலவாரிய உறுப்பினர் முனைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் பங்கேற்க,
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் செ.உமாராணி பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் மேம்பட இந்த அரசு பெருமுயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
காவல் துணை ஆய்வாளர் (சி.பி.சி.ஐ.டி) திரு சரவணகுமரன் பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் கவிஞர் ஏகலைவன் போல உள்ளத்தில் வைராக்கியமும் உழைப்பும் மேற்கொண்டு வளரவேண்டும் என்றார்.
மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினர் முனைவர் ஜாகிர் உசேன் பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக அரசு அமைத்துள்ள நலவாரிய செயல்பாடுகளைப் பார்க்கிறபோதும் சரி.. முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சராக செயல்பட்டு சிறப்பான சலுகைகள் அறிவிக்கும்போதும் சரி.. இதுபோல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தானே முன்வந்து உதவிப்பொருட்கள் வழங்குவதைப் பார்க்கும்போதும் சரி..
மாற்றுத்திறனாளி சமுதாயம் நிச்சயமாக உயர்ந்து நிற்கும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது என்று பேசினார்.
நிறைவாக அமைப்பின் தலைவர்
கவிஞர் ஏகலைவன் பேசும்போது,
சேலம் மாநகரில் கடந்த 12 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளர் நலனுக்காகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்காகவும், சாலையோர முதியோருடைய பசிப்பிணி தீர்ப்பதற்காகவும் பாடுபட்டு செயலாற்றி வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் சமூகத்தில் தொடங்கப்பட்டுள்ள,
நம்பிக்கை முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களை இலவசமாக சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் பங்கேற்க விழா இனிதே நடைபெற்றது.