நலத்திட்ட உதவிகள்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, டிரஸ்ட்டுக்கான உறுப்பினர் சேர்க்கை & பயனாளிகள் தேர்வு முகாம் சேலம் ஸ்ரீ வாசவி சுபிக்சா ஹாலில் ஞாயிற்றுக்கிழமை (24.6.2018) நடைபெற்றது.

              விழாவுக்கு ஜனாப் H.அப்சர் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

              தமிழ்த்தும்பி மு.முகைதீன் விழாவுக்கு தலையேற்க, முதுநிலை செய்தியாளர் திரு.P.சிவசுப்ரமணியம், திரு. Rtn N.ஸ்ரீதர், திரு. A.K. இராதாகிருஷ்ணன், திரு. K.சக்திவேல், திரு. சேலம் சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

              திருமதி சுகந்தி சுதர்னம், அமெச்சூர் ஆர்ட்ஸ் திரு.ராசி சரவணன், திருமதி P.V. லஷ்மி, திருமதி Rtn G.ரேவதி, கவிஞர் இரா.ஹேமலதா, திரு ஓ-டெக்ஸ் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

              விழாவில் பேசிய திருமதி. சுகந்தி சுதர்சனம் அவர்கள், “இன்றைய நாகரிக உலகில் சகமனிதர்கள் மீதான அன்பு படிபடியாக குறைந்து வருகிறது. ஆனால் தன்னை போல மாற்றுத்திறனாளிகள் மீது அன்போடும் அக்கறையோடும் செயல்பட்டு வருகிறார் கவிஞர் ஏகலைவன் அவர்கள். இவர் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதே நாம் செய்யும் நல்ல பணியாக இருக்கும். கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடங்கியுள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் செயல்பாடுகளும் அவரின் கனவுகளும் வெற்றி பெறும் என்பதற்கு அவரின் செயல்பாடுகளே சான்றாக அமைந்துள்ளது” என்று பேசினார்.

              விழாவில் பேசிய திரு. ராசி. சரவணன் அவர்கள்,”கவிஞர் ஏகலைவன் அவர்கள் நம்பிக்கையின் உருவமாக நம் மனதில் நிலைத்து நிற்பவர். மாற்றுத்திறனாளியான அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி வழங்கவும் அவர்களுக்கான நலத்திட்ட உதவிப் பணிகள் செய்யவும் தொடங்கியுள்ள இந்த நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் அத்தனை செயல்பாடுகளும் வெற்றி பெறும். அதற்கு அனைவரும் அவருக்கு துணை நிற்போம்” என்று வாழ்த்திப் பேசினார்.

              விழாவில் ஏற்புரை வழங்கிய நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் அவர்கள்,”மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கை தேவைகளை தாங்களே கவனித்து கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களைக் கடந்து, சாதனையாளராக வலம் வர வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நல்ல பயிற்சிகளோடு, தொழிற்பயிற்சி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி மையம் தொடங்குதல் போன்றவற்றை இலக்காக கொண்டு செயல்படும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்டுக்கு இத்தனை நல்ல உள்ளங்கள் துணை நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பேசினார்.

              இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளான திரு. அலெக்சாண்டர், திரு. சபீர் ஆகியோருக்கு Rotary Club of Salem Junction மற்றும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் சார்பாக சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

              கவிஞர் ச.கோபிநாத் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு ஜனாப் H.அப்சர் அலி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

              நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டு டிரஸ்ட்டின் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.