நம்பிக்கை வாசல் டிரஸ்ட் செயல்பாடுகள்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் – நோக்கம்

சேலத்தை மையமாகக் கொண்டு சமூகப் பணிகளை செயல்படுத்துவதற்காக 2013ல் துவக்கப்பட்ட நம்பிக்கை வாசல் டிரஸ்ட் கடந்த ஏழாண்டுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நன்மைகளைச் செய்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவிகள், வீல் சேர்கள், ஊன்றுகோல்கள், காதொலிக் கருவிகள், படுக்கை உபகரணங்கள், சுயதொழில் உதவிப்பொருட்கள், அரசுதவி பெற வழிகாட்டல்கள் போன்றவை மட்டுமல்லாமல், அன்னதானம் வழங்குதல், அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கான  திறமை மேம்பாட்டு போட்டிகள் நடத்துதல், கல்வி மேம்பாட்டிற்கான மாலை நேர வகுப்புகளை இலவசமாக நடத்தி, இளைய தலைமுறையின் கல்வி மேம்பாட்டிற்கு துணைபுரிதல் போன்ற அறப்பணிகளை செயல்படுத்துவதை தனக்கான நோக்கங்களாகக் கொண்டு செயலாற்றி வருகிறது.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் செயல்பாடுகள்

2016

நூலகங்களுக்கு புத்தக அன்பளிப்பு – 2016

வாசிப்பை மேம்படுத்தும் நோக்கிலும், நல்ல புத்தகங்களை ஆதரிக்கும் எண்ணத்தோடும், ஒவ்வொரு ஆண்டும் பத்து நூலகங்களுக்கு புத்தகங்களை   பரிசளிப்பாக வழங்கும் அறச்செயலை மேற்கொண்டு வருகிறது நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

அந்த இனிய நோக்கத்தின்படி 20.11.2016ல் நடைபெற்ற விழாவில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் ஆலோசகர் கலைமாமணி திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் சேலம் ஏவிஆர் ஸ்வர்ணமஹால் அதிபர் திரு ஏபி.சுதர்சனம் அவர்கள், தாரை சிட்ஸ்  தாரை திரு குமரவேலு அவர்கள், சேலம் தொழிலதிபர்கள் திரு மு.முகைதீன் அவர்கள், ஜேசி திரு சரவணகுமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

2017

சாதனையாளர்  கௌரவிப்பு நிகழ்வு – 2017

சிறந்த மாற்றுத்திறன் சாதனையாளர்களைப் பாராட்டி,  அவர்கள் செய்த சேவைகளை எடுத்துரைத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும்  முயற்சியாக  தேனி மாவட்டத்தில் பல சிரமங்களுக்கு இடையில் “ராம்ஜி டிரஸ்ட்” என்கிற பெயரில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டோருக்கான நல்வாழ்வு இல்லத்தை நடத்திவரும் முன்னாள் இராணுவ வீரரும், சக்கர நாற்காலி சாதனையாளருமான திரு வெங்கட பூபதி அவர்களை நம்பிக்கை வாசலின் 5 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் மூத்த திரைப்பட இயக்குனர் கலைமாமணி திரு எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கல்கி பத்திரிகையாளர் திரு அமிர்தம் சூர்யா அவர்கள், இராமநாதபுரம் கல்வியாளர் முனைவர் அ.சங்கரலிங்கம் அவர்கள், சேலம் தொழிலதிபர் திரு ஸ்ரீதர் அவர்கள் ஆகியோரின் கரங்களால் “நாயகன் விருது – 2017” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2018

25 ஜூன் 2018

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் இவ்விழாவில் சுகந்தி சுதர்சனம் ராசி சரவணன் ஸ்ரீதர் தொழிலதிபர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்

விழாவில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு வீல் சேர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன

ஜூலை 29 2018

சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்ப்பேட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடந்தது

பேராசிரியர் ஜாகிர் உசேன் ஜேசிஐ சேலம் மெட்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் தினேஷ் ராஜ் சக்திவேல் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி  டாக்டர் உமை பானு பள்ளி தலைமையாசிரியை மதினா ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆகஸ்ட் 19 2018

சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் தாரமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது

சேலம் ஜேசிஐ மெட்ரோ அமைப்பின் தலைவர் மோகன்ராஜ் ராதாகிருஷ்ணன் சமூக ஆர்வலர் லக்ஷ்மி தொழிலதிபர் ஜெயசீலன் முதுகு தண்டுவட காயமடைந்தோர் அமைப்பின் பிரதிநிதி சக்திவேல் மறுவாழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியை ஆரோக்கியமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

செப் 2 2018

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் வாழப்பாடி முன்னாள் சேர்மன் செல்வம், ஜேசி சரவணகுமார், தொழில் முனைவோர் ஸ்ரீதர், சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வீழ்சேர் களை இலவசமாக வழங்கினர்

2019

ஜனவரி 4 2019

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் மற்றும் வாசகன் பதிப்பகம் ஆகியவை இணைந்து நூல்கள் வெளியீட்டு விழா மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நன்கொடையாளர்கள் கௌரவிப்பு விழா ஆகியவற்றை விழாவாக நடத்தியது

விழாவிற்கு மனவளக்கலை மன்ற மண்டலத் தலைவர் உழவன் தங்கவேலு தலைமையாசிரியை கிருஷ்ணவேணி ஆடிட்டர் நாச்சிமுத்து எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சொல்வேந்தர் சுகிசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பிற்கான நன்கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

17 மே 2019

சேலத்தில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான மாலை நேர படிப்பு மையம் மற்றும் மறுவாழ்வு பயிற்சி இல்லம் அமைப்பது குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

மாற்றுத் திறனாளிகளுக்கு சேலத்தில் தொழிற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நம்பிக்கை இல்லத்தில் பேப்பர் கப் பாக்கு மட்டை தயாரித்தல் தையற் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது

மே 19 2019

சேலம் கன்னங்குறிச்சியில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் நம்பிக்கை இல்லம் என்ற மாற்றுத் திறனாளர் மறுவாழ்வு பயிற்சி இல்லம் இலவச மாலை நேர படிப்பு மையம் திறப்பு விழா நடந்தது

இந்நிகழ்வில் எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் கலந்துகொண்டு இல்லத்தினை திறந்துவைத்தார்

ஜூலை 7 2019

சேலம் கன்னங்குறிச்சி மகாலட்சுமி நகரில் உள்ள நம்பிக்கை இல்லத்தில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் சென்டர் துவக்க விழா நடைபெற்றது

விழாவில் பெரியார் சுவர்ண மஹாலின் தேவியால் சுகந்தி சுதர்சனம் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை நிறுவனர் மோகன் சக்திவேல் நம்பிக்கை வாசல் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்

17 ஆகஸ்ட் 2019

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் இந்திய நாட்டின் 73 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நம்பிக்கை இல்லத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய மாணவ மணிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இந்நிகழ்வில் மகேந்திரா பொறியியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் அருள்செல்வம் ஹெர்பாலைஃப் சுந்தர் எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் ஜனாப் ஸரளி ஆசிரியை சீலா ஆகியோர் கலந்து கொண்டனர்

நவம்பர் 22 2019

சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இயலா குழந்தைகளின் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரும் சிறப்பாசிரியர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சி சார்ந்து முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய  பயிற்சி குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது

 பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

2020

2 ஜனவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் 2019ல் நிகழ்த்தப்பட்ட சமூகப் பணிகள் குறித்தும்.. 2020ல் மேற்கொள்ள இருக்கும் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் பெற.. ஆலோசகர்களான சொல்வேந்தர் ஐயா சுகிசிவம் அவர்களையும்.. கலைமாமணி ஐயா லேனா தமிழ்வாணன் அவர்களையும்.. டிரஸ்டின் அங்கத்தினர்களான கவிஞர் ச.கோபிநாத், திரு அ.ஷாஜஹான் ஆகியோருடன் சந்தித்து டிரஸ்டின் வளர்ச்சிப்பணிகாள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

8 ஜனவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் பல்வேறு நலப்பணிகளை சமூக அக்கறையாளர்களிடம் தெரிவித்து ஆலோசனைகள் பெறுவதன் ஒரு பகுதியாக.. ஆன்மீகப் பேச்சாளர் திருமதி தேசமங்கையர்க்கரசி அவர்களிடம் டிரஸ்டின் வளர்ச்சி குறித்து விளக்கி கூறி ஆலோசனைகள் பெறப்பட்டது.

10 ஜனவரி 2020

கோவை CIT கல்லூரியில் 1989ல் இணைந்து படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த நட்புகள் தங்களது நட்பின் 30 ஆம் ஆண்டினை முன்னிட்டு.. நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டுக்கு ரூ முப்பதாயிரம் நன்கொடையாக நேற்று மாலை வழங்கினர்.

14 ஜனவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஆலோசனைகள் பெற.. சென்னை மாநகரின்
முன்னாள் மேயரும்.. மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனருமான.. திரு சைதை துரைசாமி அவர்களை
டிரஸ்டின் அங்கத்தினரான திருமதி PV.லக்ஷ்மி அவர்களுடன் சந்தித்து நம்பிக்கை வாசல் டிரஸ்ட் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

18 ஜனவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் வழங்கிய கல்வி உதவி.

தர்மபுரி SV Institution Of Medical Science எனும் கல்வி நிறுவனத்தில் DMLT (Diploma in Medical Lab Technology) பயின்று வரும் மாற்றுத்திறனாளி ( உடற்குறை அளவு – 75%) மாணவரான திரு சபரிதாஸ் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க.. அவருக்கான முதலாமாண்டு கல்விக்கட்டணத்தின் நிலுவைத் தொகையான ரூ 7,000/ கல்வி நிறுவனத்திற்கான காசோலையை டிரஸ்டின் கௌரவ ஆலோசகரான திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் கரங்களால் நேற்று மாலை தர்மபுரி மாவட்ட மைய நூலக விழாவில் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட முதுகுத்தண்டுவட பாதிப்பாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான திரு சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இம்முயற்சியில் துணைபுரிந்த ஜேசி கார்த்திகேயன் அவர்கள், ஜேசி வெங்கடாஜலம் அவர்கள் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

19 ஜனவரி 2020

அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கான எங்கள் Free Tuition Center பிள்ளைகளோடு பொங்கல் கொண்டாட்டமாய்.. மதியக்காட்சி “தர்பார்” திரைப்படம் அழைத்து வரப்பட்டது.

23 ஜனவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஆலோசனைகள் பெற.. காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் CEO & Founder ஆக 27 வருடங்களாக இருப்பதுடன்.. ஸ்ரீ பத்மகிருஷ் அறக்கட்டளையையும் நடத்தி வரும் திருமிகு காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களை கடந்த வாரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

26 ஜனவரி 2020

சேலம் நம்பிக்கை வாசல் ட்ரஸ்டின் இலவச மாலை நேரப் படிப்பு மையத்தில் அரசுப்பள்ளி பிள்ளைகளோடு குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது

நம் நாட்டினை மீட்டெடுத்த தேசத் தலைவர்கள் குறித்த பேச்சும் வழிபாடும் போராடி பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.

3 பிப்ரவரி 2020

“மதிப்பெண்களும் முக்கியம்” கடந்த வாரத்தில் இராமநாதபுரம் சென்றிருந்தபோது அங்குள்ள பிரபலமான கல்விக்குழுமமான நேஷனல் அகாடமி பள்ளியின் 9 & 10 வகுப்பு மாணவமாணவியரிடையே உரையாடும் வாய்ப்பமைந்தது. சுமார் 300 மாணவ மாணவியரிடத்தில் மதிப்பெண்களைத் தாண்டிய கற்றல் குறித்தும்.. மதிப்பெண்களின் அவசியம் குறித்தும் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள ஒரு மணிநேரம் கிடைத்தது.

4 பிப்ரவரி 2020

சேலம் கன்னங்குறிச்சி மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் இன் சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச மாலை நேர படிப்பு மையத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்

அவர்களுள் கடந்த அரையாண்டுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது

10 பிப்ரவரி 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் அறப்பணிகளையும்.. நல்லுதவிச் செயல்பாடுகளையும் பார்வையிட்டு டிரஸ்டின் வளர்ச்சிக்காக வருமான வரித்துறை கூடுதல் சிறப்பு ஆணையர் திரு நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்

13 பிப்ரவரி 2020

நம்பிக்கை வாசலின் Free Tuition Centerல் சேலம் கல்லூரிப் பேராசிரியை செல்வலக்ஷ்மி அவர்கள் வருகை தந்து பிள்ளைகளுடன் உரையாற்றினார்..

2 மார்ச் 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் Free Tuition Centerல் பயிலும் அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கான எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் இல்லத்தில் சிறப்பாக நடந்தேறியது.. விரைவில் வரவிருக்கும் ஆண்டுத் தேர்வை சிறப்பாக மேற்கொள்ள பிள்ளைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன..

2 மார்ச் 2020

நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டின் புதிய உறுப்பினர்கள் அறிமுக நிகழ்வு நேற்று மாலை நம்பிக்கை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது எட்டாண்டுக்கால சமூகப் பணிகளைப் பற்றிய விளக்கமும்,
எதிர்காலப் பயணம் குறித்த அவசியமும் பற்றி கலந்துரையாடப்பட்டது

10 மார்ச் 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச மாலைநேர படிப்பு மையத்தில் மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

இந்நிகழ்வில் சரஸ்வதி டியூஷன் சென்டர் சரஸ்வதி அழகுக்கலை நிபுணர் லட்சுமி கவிஞர் ச.கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

சேலம் கருப்பூரை சேர்ந்த தசைச்சிதைவு மாற்றுத்திறனாளிகள் அருள் செல்வம் மற்றும் வினோத் குமார் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் கட்டில் ஆகியவை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன

4 ஏப்ரல் 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கொரோனா கிருமி நாசினி தண்ணீர் தெளிப்புப் பணி நடைபெற்றது.

மஞ்சள், உப்பு, வேப்பிலை ஆகிய பொருட்களின் துணையோடு தயாரிக்கப்பட்ட இந்த தண்ணீர் தெளிப்பு பணி மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் துணைச் செயலாளர் திரு ஷாஜஹான், PRO திரு சையது இப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியில் திரு உமர் பாரூக், திரு முருகன், திரு கிஷோர், திரு ராஜேந்திரன், திரு சுரேஷ் ஆகிய தொண்டுள்ளங்கள் பங்கேற்றனர்.

இந்த சுகாதாரப் பணியின் விளைவாக அம்மாப்பேட்டை மெயின் ரோடு, குலசேகர ஆழ்வார் தெரு, சித்தேஸ்வரா, பாலாஜி நகர், புதுத் தெரு – 1, புதுத் தெரு – 2, புதுத் தெரு – 3 ஆகிய பகுதிகளில் வாழும் பல்லாயிரம் குடும்பங்களுக்கான நன்மையடைந்தனர்.

6 ஏப்ரல் 2020

நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் இன்று காலை சாலையோரங்களில் பசியோடிருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அறப்பணி நடைபெற்றது.

அம்மாப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் காலனி, அயோத்தியாபட்டணம், வலசையூர், புத்து மாரியம்மன் கோவில், பொன்னம்மாப்பேட்டை, மணல் மார்க்கெட், பட்டைக் கோயில் ஆகிய பகுதிகளில் இருந்தோருக்கு, இந்த கொரோனா நாட்களிலும், சிக்கலான காலகட்டத்தில் பசி தீர்க்க முடிந்ததில் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

7 ஏப்ரல் 2020

நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் இன்று காலை சாலையோரங்களில் பசியோடிருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அறப்பணி நடைபெற்றது.

அம்மாப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் காலனி, அயோத்தியாபட்டணம், வலசையூர், புத்து மாரியம்மன் கோவில், பொன்னம்மாப்பேட்டை, மணல் மார்க்கெட், பட்டைக் கோயில் ஆகிய பகுதிகளில் இருந்தோருக்கு, இந்த கொரோனா நாட்களிலும், சிக்கலான காலகட்டத்தில் பசி தீர்க்க முடிந்ததில் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

ஏப்ரல் 10 2020

நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டும், சேலம் அம்மாப்பேட்டை தி.மு.க. உறுப்பினர் திரு மணி அவர்களும், அவரது நட்புகள் திரு ஹரி, திரு தினேஷ் ஆகியோரும் இணைந்து.. இன்று மதியம்

நூற்றுப் பத்து குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான அரிசி + காய்கறி வழங்கப்பட்டது.

அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, மன்னார்பாளையம் பிரிவு ரோடு, ஜோதி தியேட்டர் அருகாமை  போன்ற பகுதிகளில் வாழும் ஏழ்மை நிலை குடும்பங்களின் ஊரடங்கு நேரத்தின்

பசி தீர்க்கும் இந்த அறப்பணியில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தனது பங்களிப்பை செய்தது.

ஏப்ரல் 14 2020

நமது  நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் இன்று காலை (ஏப்ரல் 14) சாலையோரங்களில் பசியோடிருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அறப்பணி நடைபெற்றது.

அம்மாப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் காலனி, அயோத்தியாபட்டணம், வலசையூர், புத்து மாரியம்மன் கோவில், பொன்னம்மாப்பேட்டை, தில்லை நகர், மணக்காடு, சின்னத்திருப்பதி, கன்னங்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்தோருக்கு, இந்த சிக்கலான   கொரோனா காலகட்டத்தில் பசி தீர்க்க முடிந்ததில் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

15 ஏப்ரல் 2020

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள முதியோர்கள் மாற்று_திறனாளர்கள், சாலையோர மக்கள் , வருமானமில்லா கிராம மக்களுக்கு நம்பிக்கை வாசல் அறக்கட்டளை சார்பில் உணவுகள், மற்றும் கையுறை, முக உறைகள் கொடுப்பது மற்றும் கொரோனா பரவல் தடுப்பு பற்றியும் நமது பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் தரப்பட்டது.

16 ஏப்ரல் 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

28 ஏப்ரல் 2020

சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நூலகத்திற்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள 200 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் திலீப்குமார் நூலகர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஏப்ரல் 29 2020

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் மேம்பாட்டில் அக்கறையோடு செயலாற்றும் நமது அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா  உதவிப் பொருட்களாக.. மளிகை +  காய்கறிப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன

மே 4 2020

கடந்த ஏழாண்டுக் காலமாக சேலம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு சமுதாய மேம்பாட்டில் அக்கறையோடு செயலாற்றும் நமது அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா  உதவிப் பொருட்களாக.. மளிகை +  காய்கறிப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.

மே 4 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நலப்பணிகளுக்கு பள்ளி மாணவர் நிதியுதவி

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இவ்வேளையில், மாற்றுத்திறனாளிகள் பலரும் தங்களின் அன்றாட உணவுத் தேவைகளுக்கு உதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகளை இனம் கண்டு அவர்களின் உணவுத் தேவைகளுக்காக உணவுப்பொருள் தொகுப்பினை அவர்களின் இல்லம் தேடிச் சென்று வழங்கி வருகிறது சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பு.

இவ்வமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வரும் செய்தியை அறிந்த வித்யாமந்திர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன் அப்துல்லா எனும் சிறுவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, (மே 4) தனது சேமிப்பிலுள்ள ரூபாய் 500 தொகையினை நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் கவிஞர் ஏகலைவனிடம் அவர் இந்தத் தொகையை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து சேலம் பச்சப்பட்டியைச் சேர்ந்த மனநலம் குன்றிய ஜெய்கிருஷ்ணா என்கிற 9 வயது சிறுவனுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அப்துல்லா தனது அன்பளிப்பாக வழங்கினார்.

மே 5 2020

சமுதாய மேம்பாட்டில் அக்கறையோடு செயலாற்றும் நமது  நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று காலை (மே 6) கொரோனா  உதவிப் பொருட்களாக.. மளிகை +  காய்கறிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மே 7 2020

நமது நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் இன்று பகல் (மே 7) சாலையோரங்களில் பசியோடிருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அறப்பணி நடைபெற்றது.

பழைய பஸ்ஸ்டாண்ட், அப்சரா தியேட்டர் இறக்கம், GH அருகில், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, மணக்காடு, அணைமேடு, பொன்னம்மாப்பேட்டை கேட் ஆகிய பகுதிகளில் இருந்தோருக்கு, இந்த சிக்கலான கொரோனா காலகட்டத்தில் பசி தீர்க்க முடிந்ததில் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

மே 13 / 2020

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் தேவைகளில் அக்கறையோடு செயலாற்றும் நமது நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி + பருப்பு +  எண்ணெய் + உப்பு + காய்கறிகள் உள்ளிட்ட 19 பொருட்கள் கொண்ட கொரோனா  நிவாரணப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

மே 17 2020

சேலம்மாவட்டம் அஸ்தம்பட்டி, பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள முதியோர்கள்மாற்று_திறனாளர்கள், சாலையோர மக்கள், வருமானமில்லா கிராம மக்கள் ஆகியோருக்கு நம்பிக்கை வாசல் அறக்கட்டளை சார்பில் உணவு, உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு பற்றியும், நமது பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் தரப்பட்டது.

மே 20, 2020

நமது  நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி + பருப்பு + காய்கறிகள் உள்ளிட்ட 17 பொருட்கள் கொண்ட கொரோனா  நிவாரணப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

மே 29 2020

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நலப் பணிகளுக்கு பள்ளி மாணவர் நிதி உதவி

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாற்றுத் திறனாளிகள் பலர் தங்களின் அன்றாட உணவுத் தேவைகளுக்கு உதவிகளை எதிர்பார்த்து உள்ளனர்.

இத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்காக உணவுப் பொருள் தொகுப்பை அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கி வருகிறது சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பு

இதை அறிந்த வித்யாமந்திர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் அப்துல்லா தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது சேமிப்பு தொகை ரூபாய் 500 நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் கவிஞர் ஏகலைவனிடம் நன்கொடையாக வழங்கினார்

தொடர்ந்து சேலம் பச்சபட்டி சேர்ந்த மனநலம் குன்றிய ஜெய் கிருஷ்ணா என்ற சிறுவனுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அப்துல்லா அன்பளிப்பாக வழங்கினார்

ஜூன் 23 2020

சேலம் கன்னங்குறிச்சி நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச மாலை நேர படிப்பு மையத்தில் அன்பின் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த இனிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் வாழ் தமிழ் படைப்பாளர் கவிஞர் தியாக ரமேஷ்  கவிஞர் ஆசிரியர் கோபிநாத் மற்றும் மக்கள் பாதை கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்

கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது

நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் பெற்ற அங்கீகாரங்கள்.

23.5.2014

அன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் அன்றைய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சரான திரு இராஜேந்திர பாலாஜி அவர்களின் கரங்களால்  “சீரிதழ் விருது” எனும் அங்கீகாரம் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பில் நடத்தப்பட்ட தன்னம்பிக்கை மாத இதழான “நம்பிக்கை வாசல்” பத்திரிகைக்கு வழங்கப்பட்டது.

உடனிருந்தவர்கள் முன்னாள் காவல்துறை உயரதிகாரி திரு நட்ராஜ் அவர்கள், தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் திரு பூ.ஆ.இரவீந்திரன் அவர்கள் ஆகியோர்.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நிறுவனருக்கு “சிறந்த மாற்றுத்திறன் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது.

அன்றைய சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மகரபூஷணம் அவர்களின் கரங்களால் இந்த விருது வழங்கப்பட்டது.

பிரபலங்களின் பார்வையில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்

அண்மையில் தமிழகம் சென்றிருந்த நான் சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் கவிஞர் ஏகலைவன் அவர்களின் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நம்பிக்கை இல்லத்துக்குச் சென்று இருந்தேன்.

எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன்,  சொல்வேந்தர் சுகிசிவம் ஆகியோர் இந்த நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் கௌரவ ஆலோசகர்களாக வழி காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்தல்,  தன்னம்பிக்கை பயிற்சி வழங்குதல், தொழில்துறை பயிற்சிகள் வழங்குதல் என மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஏராளமான பணிகளை செய்து வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வாழ்க்கைச் சூழல்களை தாங்களே நடத்திக் கொள்ளவும் வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொள்ளவும் எல்லா விதமான பயிற்சிகளையும் வழங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

இது மட்டுமன்றி ஏழை மாணவர்களுக்கான இலவச மாலை நேர படிப்பு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறது. அந்த இலவச மாலை நேரம் படிப்பு மையத்தில் நடைபெற்ற அன்பின் சங்கமம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.

நம் வாழ்க்கை அனுபவங்களை அந்த பிள்ளைகளோடு பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

அந்த மாலை நேர படிப்பு மையத்தில் பயிலும் ஒவ்வொருவரும் தனித் திறனோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதும் படிப்பு சார்ந்த முன்னேற்றத்திற்கான அனைத்து செயல்பாடுகளையும் இந்த இலவச மாலை நேர படிப்பு மையத்தில் அவர்கள் செய்து வருவதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

தன்னிறைவான சந்திப்பாக அமைந்தது அந்த சந்திப்பு.

எதிர்காலத்தில் தனித்த ஒரு இல்லம் ஒன்றை அமைத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான தன்னிறைவான செயல்பாடுகளை செய்தல், ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை செய்தல், மற்ற சமூக நலப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் அத்தனை பணிகளிலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கப்பூர் திரும்பினேன்.

கவிஞர் தியாக.ரமேஷ்

சிங்கப்பூர்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட்  – நூலகங்களுக்கான நூல் உதவிகள்

2016

நம்பிக்கை வாசல் அறக்கட்டளை சார்பாக குவைத் எழுத்தாளர் என் சி மோகன் தாஸ் அவர்களின் புத்தக அன்பளிப்பை பெற்ற அரசு பள்ளிகள் நூலகங்கள்

  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்னமுத்தூர் திருப்பூர்
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேந்தமங்கலம் நாமக்கல்
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி சர்க்கார் கொல்லபட்டி சேலம்
  • அறிஞர் அண்ணா நூலகம் தமிழ்ச்சங்கம் சேலம்
  • கிளை நூலகம் வாழப்பாடி சேலம்
  • ஊர்ப்புற நூலகம் வட்டமுத்தாம்பட்டி சேலம்

2017

நம்பிக்கை வாசல் அறக்கட்டளையின் நலப் பணியாக நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

சேலத்து வள்ளல் திரு ஏ.பி.சுதர்சனம் ஐயா அவர்களால் வழங்கப்படும் புத்தகங்கள் பெறும் நூலகங்கள்

  • சிவசங்கரி நூலகம் அமர்சேவா சங்கம் தென்காசி
  • கலாம் நூலகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மல்லியகுந்தம் மேச்சேரி
  • மனவெளி நூலகம் ஜமீன் பல்லாவரம் சென்னை
  • கிளை நூலகம் தீர்த்தகிரி நகர் பாலக்கோடு தர்மபுரி
  • நூலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நரசிங்க கூட்டம் கடலாடி இராமநாதபுரம்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் – சாதனை நாயகர் விருது

சிறந்த மாற்று திறன் சாதனையாளருக்கான வாசகன் நாயகர் விருது 2016

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

இராமநாதபுரம் மாவட்டம் நரசிங்க கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர் ஆசிரியப் பணியோடு சிறிய அளவிலான சமூகப் பணிகளையும் செய்துவருகிறார்

தினமலர் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருது சென்னை எழில் இலக்கியப் பேரவை வழங்கிய குரல் உரை செம்மல் விருது காரைக்குடி வள்ளுவர் பேரவை வழங்கிய குரல் ஆர்வலர் விருது காஞ்சி முத்தமிழ்ச்சங்கம் வழங்கும் முகநூல் வேந்தர் விருது தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் வழங்கிய ஆசிரியர் செம்மல் விருது கோவை தமிழ் இலக்கியப் பாசறை வழங்கிய கவி தூதுவர் விருது வேம்பார் காமராஜர் சமூக நலப்பேரவை வழங்கிய சாதனை நாயகன் விருது போன்றவை பெற்றுள்ள நல்லாசிரியர்

இந்த சாதனையாளருக்கு வாசகன் நாயகர் விருது 2016 வழங்குவதில் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை & வாசகன் பதிப்பகம் பெருமை அடைகின்றன

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சிறந்த மாற்றுத்திறன் சாதனையாளர்களின் நாயகர் விருது 2017

பி வெங்கட பூபதி

ராம்ஜி பொதுநல அறக்கட்டளை எனும் தன்னார்வ சேவை மையத்தின் நிறுவனர் ஆன இவர் தேனி மாவட்டம் வட புதுப்பட்டியில் பிறந்து இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்

2009 இல் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு இடுப்பு பகுதியில் உணர்வற்ற நிலை அடைந்தார் இந்த பாதிப்புக்குக் உலக அளவில் முழுமையான மருத்துவம் இன்மையால் மறுவாழ்வு பயிற்சிகள் மேற்கொண்டு தன்னைத்தானே புத்துருவாக்கம் செய்து கொண்டதோடு மற்றவர்களுக்கும் உதாரண மனிதராக விளங்குகிறார்

தேனியில் 2012 இல் தொடங்கிய ராம்கி அறக்கட்டளையின் துணையால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மறுவாழ்வு பணிகளை வழங்கி வருவதோடு தமிழக அளவிலான நீச்சல் வீரராகவும் வீட்டில் இருந்தபடி துப்பாக்கி சுடும் போட்டியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்ற இந்த சாதனையாளரை பெருமை படுத்துவதில் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை மகிழ்வடைகிறது

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் + வாசகன் பதிப்பகம் இணைந்து வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளின்

இலக்கியப் படைப்புகள்

3 டிசம்பர் 2015 – (மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு)

1. அன்பென்ற மழையிலே..

நா.முனியசாமி, இராமநாதபுரம்

(தவழும் நிலைகொண்ட மாற்றுத்திறனாளி)

2. கவித்தென்றல்

பி.மாரியம்மாள், தென்காசி.

(தவழும் நிலைகொண்ட மாற்றுத்திறனாளி)

3. ஆணுக்கும் கற்பு உண்டு

யோகி ஸ்ரீ இராமானந்த குரு.

20 நவம்பர் 2016 –

1. நம்பிக்கையும் நானும்..1

2. நம்பிக்கையும் நானும்.. 2

3. பத்திரிகைகளின் பார்வையில் நான்..

(கவிஞர் ஏகலைவன், சேலம்)

26 நவம்பர் 2017 –

1. குறையொன்றுமில்லை..

(மறுபதிப்பு)

2.வயிறு மட்டும் வாழ்க்கையல்ல..

(மறுபதிப்பு)

30.12.2018

1. பயண வழிப்பூக்கள்

(மறுபதிப்பு)

2. நல்ல நேரம் நமக்காகவே!

நம்பிக்கை வாசல் இதழ்

நம்பிக்கை வாசல் இதழ் – 2013

மாதம்அட்டைப்படத்தில் இடம்பெற்றவர்குறிப்புகள்
ஆகஸ்ட்ஐயா கிருஷ்ணமூர்த்தி 
செப்டம்பர்கவிஞர் ஏகலைவன் & லேனா தமிழ்வாணன் 
அக்டோபர்MOC துரைசாமிகல்விச் சிறப்பிதழ்
நவம்பர்முனைவர் சங்கரலிங்கம் 
டிசம்பர்அன்பகம் வீரமணி அட்டைப்படம்மாற்றுத்திறனாளி தின சிறப்பிதழ்

நம்பிக்கை வாசல் இதழ் – 2014

மாதம்அட்டைப்படத்தில் இடம்பெற்றவர்குறிப்புகள்
ஜனவரிவின்னர் மோகன்புத்தாண்டு சிறப்பிதழ்
பிப்ரவரிஎழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன்நம்பிக்கை வாசல் ஆலோசகர் லேனா தமிழ்வாணன் மணிவிழா சிறப்பிதழ்
மார்ச்பாவையர் மலர் வான்மதிமகளிர் தின சிறப்பிதழ்
ஏப்ரல்அவதார் ஆத்மகுருஆன்மீகச் சிறப்பிதழ்
மேகலைமாமணி ராஜேஷ்குமார்எழுத்தாளர் சிறப்பிதழ்
ஜுன்தில்லைக்கரசி2 ஆம் ஆண்டு சிறப்பிதழ்
ஜூலைM.S.அருள்வேல்புதிய பொலிவுடன்..
ஆகஸ்ட்திரு ஹரிஹர சுப்ரமணியன் 
செப்டம்பர்சீர்காழி மா.இராமர் 
அக்டோபர்மு.ஆ.உதயக்குமார்கல்விச் சிறப்பிதழ்
நவம்பர்பாரிஸ் ஜமால் 
டிசம்பர்M.R.சௌந்தரராஜன்மாற்றுத்திறனாளி தின சிறப்பிதழ்

நம்பிக்கை வாசல் இதழ் – 2015

மாதம்அட்டைப்படத்தில் இடம்பெற்றவர்குறிப்புகள்
ஜனவரிDr இளங்கோவன்புத்தாண்டு சிறப்பிதழ்
பிப்ரவரிடாக்டர் கவிதாசன் 
மார்ச்ஏவிஆர். சுகந்தி சுதர்சனம்மகளிர் தின சிறப்பிதழ்
ஏப்ரல்வெற்றிவேல்இதழியல் சிறப்பிதழ்
மேகலை.இளங்கோ 
ஜுன்அருள்நிதி ராஜேந்திரன் 
ஜூலைதியாக.இரமேஷ், சிங்கப்பூர்அயலகச் சிறப்பிதழ்
ஆகஸ்ட்இராஜதிலகம்கல்விச் சிறப்பிதழ் 1
செப்டம்பர்கோபால.நாராயணமூர்த்திகல்விச் சிறப்பிதழ் 2
அக்டோபர்உழவன் தங்கவேலுமனவளக்கலை சிறப்பிதழ்
நவம்பர்இராமானந்த குருஆன்மீகச் சிறப்பிதழ்
டிசம்பர்வெளிவரவில்லை