FREE TUITION CENTRE

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  FREE TUITION CENTREதுவக்கவிழா கன்னங்குறிச்சி மஹாலஷ்மி நகரில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லத்தில் வெள்ளிக்கிழமை (5.7.2019) நடந்தது.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் வரவேற்புரையாற்றினார்.

AVR ஸ்வர்ண மஹால் – திருமதி AVR சுகந்தி சுதர்சனம் மற்றும் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் Dr.கர்லின் எபி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய திருமதி AVR சுகந்தி சுதர்சனம் அவர்கள் “கல்வி என்பது அழியாச் செல்வம். நாம் வாழ்வில் நம்பிக்கையோடு இருக்கவும், வெற்றி பெறவும் கல்வியே நமக்கு எப்போதும் துணைநிற்கும். அத்தகைய கல்வியின் சிறப்புணர்ந்து குழந்தைகள் கல்வி கற்க வேண்டும். கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது அறப்பணி. இத்தகைய நல்ல பணியை நம்பிக்கை வாசல் டிரஸ்ட் செய்து வருவது பாராட்டுக்குரியது” என்று பேசினார்.

வாழ்த்துரை வழங்கிய ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் Dr.கர்லின் எபி, “சாதாரண மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் அடிப்படையாக விளங்குவது கல்வியே. கல்வி நமக்கு நம்பிக்கையையும் முயற்சி செய்யும் துணிவையும் வழங்கி சாதனை செய்ய வழிவகை செய்யும். அத்தகைய கல்வியை மாணவர்கள் விரும்பி கற்க வேண்டியது அவர்களின் கடமை. மாணவர்களின் கல்விக்கு துணைநிற்கும் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் இந்த மாலை நேர FREE TUITION CENTREஐ இப்பகுதி குழந்தைகள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்” என்று கூறினார்.

கவிஞர் ச.கோபிநாத் நன்றியுரையாற்றினார்.

விழாவில் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை நிறுவனர் Dr.மோகன், திரு.சக்திவேல், நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அங்கத்தினர்களான திரு.ஷாஜஹான், திரு.கார்த்திக், திருமதி வஹிதா பானு மற்றும் கன்னங்குறிச்சி பகுதியில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.